25 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
எல்லைத் தாண்டியதாக 25 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 25 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்களை 4 நாட்டுப் படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வது தொடர் கதையாக உள்ளது.
2024 ஜனவரி முதல் தற்போது வரை மொத்தம் 28க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகளையும், 214க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.