ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 
தமிழ்நாடு

மருத்துவத் துறை செயலாளர் உள்பட தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சுப்ரியா சாகு மருத்துவத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

DIN

சென்னை: மருத்துவத் துறை செயலாளர் உள்பட தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக அரசின் மருத்துவத் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா, இந்து அறநிலையத்துறை மற்றும் கலாசாரத் துறை முதன்மைச் செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுளார். நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மணிவாசனை நியமித்துள்ளது தமிழக அரசு.

சமூகப் பாதுகாப்புத் திட்டச் செயலாளராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப் பணித்துறை செயலாளராக மங்கத் ராம் நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா, செய்தி மற்றும் காகிதத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

வனத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத் துறை செயலாளராக செல்வராஜ் நியமனம்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் இயக்குநராக விஜயலட்சுமியும், காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக வெங்கடாச்சலமும், நில சீர்திருத்த ஆணையராக ஹரிஹரன் மற்றும் போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக லில்லி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

பட்டுப் புன்னகை... சரண்யா துராடி!

நினைவின் மயக்கம்... ஸ்ரீகெளரி பிரியா!

SCROLL FOR NEXT