முகப்பு
தமிழ்நாடு

வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிப்பு

தமிழ்நாட்டுக்கான வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிப்பு

Updated On : 1 ஜூலை, 2024 at 4:54 PM
பகிர்:

நாகர்கோவில், மதுரை, ராமநாதபுரம், ஈரோடு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை(ஜூலை 1) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரையிலிருந்து கச்சேகுடா வரை இயக்கப்படும் மதுரை - கச்சேகுடா வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 07192), ஜூலை 3 முதல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்வழித்தடத்தில், கச்சேகுடாவிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் கச்சேகுடா - மதுரை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 07191), ஜூலை 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலிருந்து கச்சேகுடா வரை இயக்கப்படும் நாகர்கோவில் - கச்சேகுடா வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 07436), ஜூலை 7 முதல் செப்டம்பர் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்வழித்தடத்தில், கச்சேகுடாவிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் கச்சேகுடா - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 07435), ஜூலை 5 முதல் செப்டம்பர் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டிலிருந்து ஹஸூர் சாஹிப் நாண்டேட் வரை இயக்கப்படும் ஈரோடு - ஹஸூர் சாஹிப் நாண்டேட் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 07190), ஜூலை 7 முதல் செப்டம்பர் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்வழித்தடத்தில், ஹஸூர் சாஹிப் நாண்டேட்டிலிருந்து ஈரோடு வரை இயக்கப்படும் ஹஸூர் சாஹிப் நாண்டேட் - ஈரோடு வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 07189), ஜூலை 5 முதல் செப்டம்பர் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்திலிருந்து செகந்திராபாத் வரை இயக்கப்படும் ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 07696), ஜூலை 5 முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்வழித்தடத்தில், செகந்திராபாத்திலிருந்து ராமநாதபுரம் வரை இயக்கப்படும் செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 07695), ஜூலை 3 முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →