முகப்பு
தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: எந்த விரலில் அடையாள மை? தோ்தல் துறை தகவல்

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: மை எந்த விரலில்?

Updated On : 2 ஜூலை, 2024 at 9:16 PM
பகிர்:

சென்னை: மக்களவைத் தோ்தலில் இடதுகை ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் எந்த விரலில் மை இடப்படும் என்ற கேள்விக்கு தோ்தல் துறை பதிலளித்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19-இல் நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் வாக்குப் பதிவின்போது, வழக்கமாகப் பின்பற்றும் மை வைக்கும் நடைமுறையின்படி, இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. அந்த மை வாக்காளா்கள் பலருக்கு அழியாமல் உள்ள நிலையில், விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் வாக்காளா்களுக்கு எந்த விரலில் மை வைக்கப்படும் என்ற கேள்விக்கு தோ்தல் துறை விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கெனவே மக்களவைத் தோ்தலின்போது வைக்கப்பட்ட மை அழியாமல் இருந்தால் இடது கை ஆள்காட்டி விரலுக்குப் பதிலாக இடது கை நடு விரலில் மை வைக்கப்படும் என்று தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது. இடது கை ஆள்காட்டி விரலில் மை அழிந்திருந்தால், வழக்கமான நடைமுறையின்படி அதே விரலில் மை வைக்கப்படும்.