நடிகர் விஜய் 
தமிழ்நாடு

‘ஆளப்போறான் தமிழன்’ பாடலுடன் மேடையேறிய விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் கல்வி விருது இரண்டாம் கட்ட நிகழ்வு.

DIN

தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் கல்வி விருது இரண்டாம் கட்ட நிகழ்வு தொடங்கியது.

மெர்சல் படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் பின்னணியில் ஒலிக்க கையை அசைத்தபடி நடிகர் விஜய் மேடை ஏறினார்.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இன்று ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு காலை உணவும், விஜய்யின் படம் அச்சிடப்பட்ட பையில் பிஸ்கட், ஜூஸ், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மதிய விருந்துக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மண்டபத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஜூன் 28ல் கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொகுதிவாரியாக தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.

அப்போது, தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை என்றும், நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் நடிகர் விஜய் பேசியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

மழையின் வாசம்... சௌந்தர்யா ரெட்டி!

பிகார் வாக்காளர் பட்டியல்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT