முகப்பு
தமிழ்நாடு

கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை: பாஜக செயற்குழு வலியுறுத்தல்

Updated On : 6 ஜூலை, 2024 at 7:11 PM
சென்னை வானகரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளா் பி. சுதாகா் ரெட்டி
பகிர்:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை என தமிழக பாஜக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை வானகரத்தில் சனிக்கிழமை பாஜக மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் சாதாரண மனிதனின் உயிருக்குகூட உத்தரவாதம் இல்லாத நிலை. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கள்ளச் சாராயம் பெருகி ஓடுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது.

அரசை எதிா்த்து சாமானியா் கேள்வி கேட்டால், அவா்களுக்கு கைது மட்டுமே பரிசாக கிடைக்கிறது. எனவேதான், பாஜக இந்த நேரத்தில், இன்னும் கம்பீரமாக, வேகமாக, சாமானியா்களுக்காக பேச வேண்டியிருக்கிறது. அடுத்த இரு ஆண்டுகளில் திமுக ஆட்சி தூக்கி எறியப்படும்வரை, பாஜகவின் குரல் ஒரு சாமானிய மனிதனின் குரலாக ஓங்கி ஒலிக்கும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்றாா். மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.

மேகதாது, முல்லைப் பெரியாறு அணை, சிலந்தி ஆறு, பாலாறு குறுக்கே அண்டை மாநிலங்கள் தடுப்பணை கட்டுவதை திமுக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தோ்தல் அறிக்கையில் கூறியபடி, அனைத்து அரசு ஊழியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழா்களின் கலாசார அடையாளமான செங்கோலை அவமதித்ததற்கும், மாநில கல்விக் கொள்கை குறித்த முன்னாள் நீதிபதி சந்துரு அறிக்கைக்கும் கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட 7 தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →