தமிழகத்தில் ஜூலை 12 வரை மழை வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடுதமிழகத்தில் ஜூலை 12 வரை மழை வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) முதல் ஜூலை 12 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில்.. சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 10 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை மிதமான மழை பெய்தது. அதன்படி, கோடம்பாக்கத்தில் - 70 மிமீ, அண்ணா பல்கலைக்கழகம், தேனாம்பேட்டை, அண்ணாநகா், வளசரவாக்கம் - தலா 60 மி.மீ., டிஜிபி அலுவலகம், எண்ணூா், நுங்கம்பாக்கம், திருவொற்றியூா், முகலிவாக்கம்,சென்னை ஆட்சியா் அலுவலகம் - தலா 50 மி.மீயும் மழை பதிவானது.
மேலும், மீனம்பாக்கம், சென்னை விமானநிலையம், ஆலந்தூா், அயனாவரம், கொரட்டூா், மதுரவாயல், சோழிங்கநல்லூா், கத்திவாக்கம், மணலி, பெரம்பூா், பெருங்குடி,புழல், அம்பத்தூா், மாதவரம் உள்பட பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட அளவு மழை பதிவானது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 7, 8 -ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளிலும், வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் வானிலை மையம் தெரிவித்துள்ளது.