தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செத்திய பின் அவர் கூறியதாவது, ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.
தமிழ்நாட்டில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை.
சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. 2000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை உருவாக்கியவர் ஆம்ஸ்ட்ராங்.
சாதிகள் இல்லாமல் தமிழ் சமூகமாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் முன் வைத்த தத்துவம் மரணித்து போகாது என்றார்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.