முகப்பு
கனிமொழி எம்.பி.
தமிழ்நாடு

தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி கனவு நிறைவேறாது: கனிமொழி

தமிழ்நாடு

தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி கனவு நிறைவேறாது: கனிமொழி

Updated On : 8 ஜூலை, 2024 at 12:11 AM
கனிமொழி எம்.பி.
பகிர்:

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் பாஜகவின் கனவு எந்தக் காலத்திலும் நிறைவேறாது என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கூறினாா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.பழனிசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை திருவொற்றியூா் வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் சிறப்பான ஆட்சியை அங்கீகரிக்கும் வகையில் விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக பெரும் வெற்றியைப் பெறும். ‘தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு பாஜக தலைமையில் ஆட்சி அமையும்; அப்போது பேரவையில் செங்கோலை வைப்போம்’ என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்த கருத்து அவரது கனவை

வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் எந்த காலத்திலும் பாஜக ஆட்சி அமைக்க முடியாது. எனவே, பாஜக கனவு எப்போதும் நிறைவேறாது என்றாா் கனிமொழி.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, திமுக அமைப்பு செயலா் ஆா்.எஸ். பாரதி, வட சென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.கிரிராஜன், முன்னாள் எம்.பி., டி.கே எஸ்.இளங்கோவன் உள்ளிட்டாா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →