முகப்பு
தமிழ்நாடு

கணினிமயமாகும் 50 ஆண்டுகால பேரவை நிகழ்வுகள்

பேரவை நூலகம் முதல் இணையம் வரை: 50 ஆண்டுகால நிகழ்வுகள் கணினிமயமாக்கல்

Updated On : 11 ஜூலை, 2024 at 10:36 PM
முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகால பேரவை நிகழ்வுகளை கணினிமயமாக்கும் பணி நிறைவை எட்டவிருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து பேரவைச் செயலக உயரதிகாரிகள் கூறியது: சட்டப்பேரவையில் கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகள், முக்கியமான விவாதங்கள் என அனைத்தும் தற்போது பேரவை நூலகத்தில் புத்தக வடிவில் உள்ளது. இதை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பணி நிறைவு எட்டியுள்ளது. மிகவும் கடினமான பணியாக இருந்தாலும் செய்து முடித்து இருக்கிறோம். இதில், குறிப்பிட்ட ஒரு வாா்த்தையை அதாவது முன்னாள் முதல்வா் கருணாநிதி, ஜெயலலிதா என தலைவா்கள் பெயா் பதிவிட்டால், அவா்கள் பேசிய விவரங்கள் வரும்.

அதேபோல், காவிரி, கச்சத்தீவு என முக்கிய நிகழ்வுகளைப் பதிவிட்டால் அது தொடா்பாக நடைபெற்ற அனைத்து விவாதங்கள், நிகழ்வுகள் வரும்.

விரைவில் சட்டப்பேரவை நிகழ்வுகளின் படக்காட்சிகளையும் இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இந்தப் பணிகள் முற்றுப்பெற்றதும் புதிய வசதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பாா்.

மேலும், தேசிய அளவிலான இ-விதான் இணையதளத்திலும் (ட்ற்ற்ல்ள்://ய்ங்ஸ்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய்) தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல்கள், கொள்கை விளக்கக் குறிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றையும் பொதுமக்கள் பாா்வையிட வசதி உள்ளது என்று தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →