ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 12) தொடக்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் (Conversion Conclave), ரூ. 36,968 கோடி முதலீட்டில் 60,823 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 31,934 கோடி முதலீட்டில் 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும், ரூ. 5,000 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில், 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இன்றைய நாள், அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் தொடங்கப்பட்ட திட்டங்கள், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பாரத் பயோடெக் நிறுவனம், 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க உள்ள உயிரியல் மற்றும் மருந்துகள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் நிறுவனம், 7000 மாணவர்களுக்கு திறன்பயிற்சி மேற்கொள்ளும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்கூறிய திட்டங்கள், பல்வேறு துறைகளில், மாநிலம் முழுவதும் நிறுவப்பட உள்ளது என்பதுதான் இன்றைய மாநாட்டின் சிறப்பம்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.