கனமழை 
தமிழ்நாடு

நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு.

DIN

தமிழகத்தில் நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான வாய்ப்புள்ளகதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. சென்னையில் பகலில் வெய்யிலும், மாலைக்கு மேல் மிதமான மழையும் பெய்து வருகின்றது. இன்று காலை முதலே சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனும் ஆங்காங்கே லேசான மழையும் பெய்து மக்களின் மனதை குளிர்வித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூலை 11) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 12, 13ல் நீலகிரி மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 14 வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடனும் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருமயம் 9 செ.மீ. மழையும், சென்குன்றம், ஆவடி, புழல், திருக்கழுக்குன்றம், ராணிப்பேட்டை 7 செ.மீ, வல்லம், மகாபலிபுரம் தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், அதிகபட்சம் வெப்பநிலை மதுரை விமான நிலையம் பகுதியில் 39.7 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் ஈரோட்டில் 20 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!

கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

மனம் தவிக்கிறது... நந்திதா ஸ்வேதா!

நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த துயரம்!!

அறிமுகமானது ஐபோன் 17! முன்பதிவு செய்தால் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT