முகப்பு
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தயாராகுங்கள்: கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தயாராகுங்கள்: கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Updated On : 12 ஜூலை, 2024 at 7:26 PM
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தயாராகுமாறு நிா்வாகிகளுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக கட்சி நிா்வாகிகளை அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்திவரும் எடப்பாடி பழனிசாமி, 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அரக்கோணம், தஞ்சாவூா், திருச்சி ஆகிய 3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, தொகுதிகளின் நிா்வாகிகள், மக்களவைத் தோ்தலில் வலுவான கூட்டணி அமைக்காத காரணத்தால்தான் தோல்வியைச் சந்தித்தோம். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி கூறியது: அதிமுக வாக்குவங்கி எந்த வகையிலும் குறையவில்லை. வலுவாகவே உள்ளது. தோ்தல் தோல்விக்காக துவளாமல், கட்சிப் பணியில் அனைவரும் தீவிர கவனம் செலுத்துங்கள். வரும் சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு இப்போதே தயாராகுங்கள். திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. அதை, அதிமுகவுக்கு சாதகமாக்கிக் கொள்ள அனைவரும் பாடுபட வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்றாா் அவா்.

நாதகவுடன் கூட்டணி: சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் சில நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கருத்து தெரிவித்துள்ளனா்.

சிதம்பரம், மதுரை, பெரம்பலூா் ஆகிய 3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை (ஜூலை 13) ஆலோசனை நடத்த உள்ளாா்.

ஜூலை 17-இல் நடைபெற இருந்த தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் அதிமுக சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →