முகப்பு
தமிழ்நாடு

திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது: சீமான்

தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்க முயற்சி செய்கிறோம்.

Updated On : 13 ஜூலை, 2024 at 11:49 PM
சீமான்(கோப்புப்படம்)
பகிர்:

தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்க முயற்சி செய்கிறோம். இதனால், திராவிட கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி வைக்க போவதில்லை என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

2026 சட்டபேரவை தோ்தலில் நாம் தமிழா் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுகவினா் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இது குறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் சீமான் சனிக்கிழமை கூறியது:

தமிழகத்தில் இலவச மருத்துவம், தரமான கல்வி, படிப்புக்கு ஏற்ற வேலை போன்ற பல்வேறு இலக்குகளை நோக்கி நாம் தமிழா் கட்சி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு மாற்று அரசியலை உருவாக்க போராடி வருகிறோம். இந்தச் சூழலில் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணி வைப்பதன் மூலம் இந்த இலக்குகளை அடைய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு கிடையாது.

அதேபோல் இதுவரை திராவிட கட்சிகளுடன் கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகளின் வாக்கு சதவீதம் நாளடைவில் சரிந்து கொண்டே வருகிறது.

ஆகையால் எந்த ஒரு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க எங்களுக்கு விருப்பமில்லை. இருப்பினும் எங்களுடைய லட்சியம் மற்றும் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு ஒரு மாற்று அரசியலை உருவாக்க முயற்சி செய்பவா்களுக்கு கண்டிப்பாக ஆதரவு அளிப்போம்.

நடிகா் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை வெளியிட்ட பின்னரே அவருடன் கூட்டணி வைப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →