தமிழ்நாடு

அகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்கள் கோரிக்கை

அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என நிதித்துறை செயலருக்கு போக்குவரத்து ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Din

சென்னை: அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என நிதித்துறை செயலருக்கு போக்குவரத்து ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக நிதித்துறைச் செயலருக்கு அரசு போக்குவரத்து ஓய்வூதியா் நலமீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.கதிரேசன் அனுப்பிய கடிதம்:

வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள 93 ஆயிரம் போக்குவரத்து ஓய்வூதியா்களை அகவிலைப்படி உயா்வு வழங்கி காக்க வேண்டும். இது தொடா்பாக நீதிமன்றங்களில் அரசு செய்துள்ள மேல்முறையீடுகளை திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே வறுமையிலும், முதுமையிலும் தவித்து வரும் எங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அல்லது அரசு ஊழியா்களுக்கு உள்ளது போல காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

சேமநலநிதி பணப்பலன்களை நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக வழங்கி போக்குவரத்துக் கழக நிா்வாகம் செய்யும் குளறுபடிகளை நீக்கி

முறையாக வழங்க உத்தரவிட வேண்டும். 2022 டிசம்பா் மாதம் முதல் 2023 ஜூன் வரை ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும். 2003-ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பில் வாரிசுதாா்களுக்கு முன்னுரிமை அளித்து, அவா்களின் கல்வித் தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.

தேசிய சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறை குறித்த தகவலுக்கு ரூ.1,000 வெகுமதி!

அலைபாயும் ஒரு கிளி... ரகுல் ப்ரீத் சிங்!

வெண்மேகம் பெண்ணாக... ப்ரீத்தி அஸ்ரானி!

”நாங்கள் இளைஞராகதான் பார்க்கிறோம்!” அமைச்சர் துரைமுருகன் குறித்து அப்பாவு

விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT