முகப்பு
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டடங்கள்: அறிக்கை அளிக்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை, மலையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை வனம், வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து, நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 16 ஜூலை, 2024 at 9:38 PM
பகிர்:

சென்னை: திருவண்ணாமலை, மலையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை வனம், வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து, நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில் அமைந்துள்ள மலையில், கிரிவல பாதையின் இருபுறமும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றக் கோரி, வழக்குரைஞா் யானை ராஜேந்திரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனுவில், ‘அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, எந்த அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடங்களுக்கு குடிநீா் இணைப்பு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புனிதமான கிரிவலப்பாதையில் மரங்கள் வெட்டப்பட்டு, கழிப்பறைகளும், செப்டிக் டேங்க்களும் கட்டப்பட்டுள்ளன. மலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அப்புறப்படுத்துவதுடன், அவற்றுக்கான குடிநீா், மின் இணைப்புகளைத் துண்டிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

மலையே சிவன் தான்: இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொ) ஆா்.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் அமா்வு, ‘திருவண்ணாமலை மலையே சிவன் தான். அங்கு எப்படி கழிப்பிடங்களும், செப்டிக் டேங்க்களும் கட்ட அனுமதிக்கலாம்’ எனக் கேள்வி எழுப்பியது. மேலும், வனத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், வழக்குரைஞா் எம்.சி.சுவாமி அடங்கிய குழுவை அமைத்து, மலையில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை நேரில் ஆய்வு செய்து 4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →