மதுபானங்களை ஸொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்து வீட்டுக்கே கொண்டுவந்து விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவு பொருள்களை வீடு தேடி கொண்டு வந்து கொடுக்கும் ஸொமாட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் மூலம் மதுபானங்களை வீடுகளுக்கேக் கொண்டு வந்து விநியோகிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, தமிழகம், கர்நாடகம், ஹரியாணா, பஞ்சாப், கோவா, கேரளம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில், சோதனை முயற்சியாக, இந்த திட்டத்தை, ஸ்விக்கி, பிக் பாஸ்கெட், ஸொமாட்டோ, பிலிங்கிட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக, குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுவகைகளான ஒயின், பியர் போன்ற மதுபானங்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது, ஒடிசா மற்றம் மேற்குவங்கத்தில், வீட்டுக்குக் கொண்டுவந்து மதுபானங்களை விநியோகிக்க அனுமதி உள்ளது. இதுபோல, தமிழகம், கர்நாடகம், ஹரியாணா, பஞ்சாப், கோவா, கேரளம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் சோதனை முயற்சியாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விதிமுறைகள், கண்காணிப்பு மற்றும் எந்தெந்த கடைகளிலிருந்து விநியோகம் செய்வது என பல்வேறு விவகாரங்களும் விரிவாக அலசப்பட்டு வருகிறது.
இதனால், நேரில் கடைக்குச் சென்று வாங்கும்போது ஏற்படும் அசௌகரியங்கள் தவிர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சில கட்டுப்பாடுகளுடன், கரோனா பொதுமுடக்கக் காலத்தில், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களில் சில கட்டுப்பாடுகளுடன் மதுபானங்களை வீடுகளுக்குக் கொண்டுவந்து கொடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.