முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

16 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

16 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 ஜூலை, 2024 at 5:11 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 16 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

நேற்று முழுவதும் பெய்த அதிகனமழையால் நீலகிரியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பகல் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சில சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும், முக்கிய நகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →