காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

DIN

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (ஜூலை 18) பிற்பகலில் வினாடிக்கு 27,665 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர்மட்டம் 50.63 அடியாகவும் உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 50,000 கன அடிக்கு மேல் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நீர்வரத்து உயர்த்துவது மேட்டூர் அணையின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் மேட்டூர் அணைக்கு வந்து பார்வையிட்டார். அணையின் வலது கரை, இடது கரை சுரங்கப் பகுதிகளை ஆய்வு செய்தார்.

மேட்டூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கர்நாடக அணையின் உபரிநீர் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT