மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

தமிழ்நாடு நாள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட விடியோ!

தமிழ்நாடு பெயர் மாற்ற விழாவில் முன்னாள் முதல்வர் அண்ணா பேசிய விடியோவை வெளியிட்டு முதல்வர் வாழ்த்து.

DIN

தமிழ்நாடு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பேரறிஞா் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு’ என்று கடந்த 1967- ஆம் ஆண்டு பெயா் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நாளை ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாக அனுசரிக்கப்பட்டு தமிழக அரசு கொண்டாடி வருகின்றது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில், முன்னாள் முதல்வர் அண்ணா, தமிழ்நாடு பெயர் மாற்ற விழாவில் பேசிய காணொலியை பகிர்ந்துள்ளார்.

அந்த காணொலியில், “தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றம் என்பதைவிட இந்த பெயரை பெற்றிருப்பது என்றுதான் சொல்ல வேண்டும். மாற்றப்பட்ட பெயரை நாம் திரும்ப பெற்றிருக்கிறோம். இந்த அரசு வந்த பிறகுதான் இந்த பெயர் பெறப்பட வேண்டும் என்று வரலாற்றில் இருந்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன்” என்று அண்ணா பேசியிருப்பார்.

மேலும், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் பேசியதாவது:

“கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT