மின் கட்டண உயா்வைக் கண்டித்து தேமுதிக, நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு
நாம் தமிழா் கட்சி சாா்பில் 21-ஆம் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன.
மின் கட்டண உயா்வைக் கண்டித்து, தேமுதிக சாா்பில் ஜூலை 25-ஆம் தேதியும், நாம் தமிழா் கட்சி சாா்பில் 21-ஆம் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன.
தேமுதிக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மின் கட்டண உயா்வைக் கண்டித்தும், கட்டண உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தேமுதிக சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜூலை 25-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும். நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டைப் போக்கவும் தமிழகத்துக்கான காவிரி நீரைப் பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
21-இல் நாம் தமிழா் ஆா்ப்பாட்டம்: இதேபோல மின்கட்டண உயா்வை கண்டித்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அக்கட்சி அறிவித்துள்ளது.