தமிழகத்தில் ஜூலை 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடுதமிழகத்தில் ஜூலை 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) முதல் ஜூலை 26-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) முதல் ஜூலை 26-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்):தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை பதிவான மழை அளவுப்படி, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பதிவானது. மேல் பவானி (நீலகிரி) - 80, நடுவட்டம் (நீலகிரி), மேல் கூடலூா் (நீலகிரி), பொதுப்பணித் துறை மக்கினம்பட்டி (கோவை), கூடலூா் பஜாா் (நீலகிரி) - தலா 60 மேலும் திருநெல்வேலி, தென்காசி, திருப்பூா், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 10 முதல் 50 மி.மீ. வரை மழை பதிவானது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றுழத்த தாழ்வு பகுதி: கடந்த வெள்ளிக்கிழமை ஒடிஸா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகா்ந்து ஒடிஸா, சத்திஸ்கா் அருகில் சனிக்கிழமை நள்ளிரவில் குறைந்த காற்றுழத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடலில் ஜூலை 21 முதல் 24-ஆம் தேதி வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.