மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம்: மு.க. ஸ்டாலின்

தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரித்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரித்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது,

மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் - தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக் கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனை, தந்தத்தாலான பகடைக்காய் போன்றவை அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், சுடுமண் சிற்பம், உணவுக் கிண்ணம், செம்பினாலான அஞ்சனக்கோல் - ஆணி என இப்படித் தொடர்ந்து அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள், தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை உறுதிசெய்கிறது!

இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம் என மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

NO COMMENTS “மனசு சரியில்லை! ராமர் கோயில் செல்கிறேன்!” செங்கோட்டையன் பேட்டி

நாளை(செப்.9) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை!

2 லட்சம் பேர் பங்கேற்ற 'புதுக்கோட்டை வாசிக்கிறது' நிகழ்ச்சி

SCROLL FOR NEXT