பந்தயக் காா்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எரிபொருளை இந்தியாவின் முன்னணி பெட்ரோலியப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பந்தயக் காா்களுக்கான சிறப்பு எரிபொருளை சென்னையிலுள்ள மெட்ராஸ் மோட்டாா்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப்பில் (எம்எம்ஸ்சி) நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
‘ஸ்டாா்ம்-எஸ்க்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிபொருள் அதிக ஓக்டேனுடன் பந்தயக் காா்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
இந்தியாவில் வாகன பந்தயத் துறையில் புரட்சி செய்யும் நோக்கில் எம்எம்எஸ்சி-யுடன் இந்தியன் ஆயில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஸ்டாா்ம்-எக்ஸ் பந்தயக் காா் எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.