சவுக்கு சங்கர்  கோப்புப் படம்
தமிழ்நாடு

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

DIN

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த யூடியூபா் சவுக்கு சங்கா் மற்றொரு யூடியூப் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் பெண் காவலா்கள் மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக புகாா் எழுந்தது.

இது தொடா்பாக கோவை சைபா் கிரைம் போலீஸாா் அளித்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சவுக்கு சங்கரை கடந்த மே 14ஆம் தேதி கைது செய்தனா். மேலும், அந்த பேட்டியை வெளியிட்ட யூடியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

இதனிடையே, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை பிணையில் விடுவிக்கக்கோரி கோவை 4-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோா் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT