முகப்பு
கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு

2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..

தமிழ்நாடு

2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..

Updated On : 27 ஜூலை, 2024 at 10:34 AM
கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:

நீலகிரி, கோவையில் இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,

நேற்று காலை 8.30 மணியளவில் மேற்கு வங்காளத்தை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து இன்று காலை மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா பகுதியில் நிலவுகிறது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஜூலை 27, 28களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்,

நீலகிரி, கோவை மாவட்ட மலைபகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 - 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்..

ஜூலை 31 வரை மன்னார் வளைகுடா மற்றம் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →