கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை, காவல்துறையினர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் 2020ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நடைமுறையை பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆதார் அட்டையை காண்பித்து கட்டணமின்றி பயணிக்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.
பெங்களூரு - கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் அருகே சுங்கச்சாவடி கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என திருமங்கலம் பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன.
அதன் அடிப்படையில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டது. இதனிடையே கப்பலூர் சுங்கச்சாவடியில் இதுவரை சென்ற வாகனங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.4 லட்சம் முதல் 12 லட்சம் வரை தொகை செலுத்த வேண்டும் என வழக்குரைஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதைத்தொடர்ந்து உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என வாய்மொழி உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.