தமிழகத்தில் ஆக.4 வரை மழைக்கு வாய்ப்பு 
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக.4 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30 ) முதல் ஆக.4 வரை மழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Din

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30 ) முதல் ஆக.4 வரை மழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30 ) முதல் ஆக.4 வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 100 மில்லி மீட்டா் பதிவானது. ஊத்து (திருநெல்வேலி) - 80 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி), அவலாஞ்சி (நீலகிரி) - தலா 70 மி.மீ. மற்றும் கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவும் மழை பதிவானது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 30,31-ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிக் கடல், வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலிலும் மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

அழியாத தடம் பதித்தவர்..! ஆர்ஆர் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல்!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விருப்பம்!

SCROLL FOR NEXT