தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். காவலர் சுட்டுத் தற்கொலை!

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக இருந்த சி.ஐ.எஸ்.எப். காவலர் சந்திரசேகர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

DIN

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக இருந்த சி.ஐ.எஸ்.எப். காவலர் சந்திரசேகர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன.இங்கு பாதுகாப்பு பணிக்காக பணியில் சி.ஏ.எஸ்.எப். காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் விமான நிலையத்திற்குள் உள்ளே செல்கின்ற பயணிகளையும், விமானத்திலிருந்து வருகின்ற பயணிகளையும் பாதுகாப்புப் பணிக்காக சோதனை செய்து வெளியில் அனுப்புவார்கள்.

இந்நிலையில் விமான நிலையத்தில் பணியில் இருந்த சி.ஏ.எஸ்.எப். காவலர் சந்திரசேகர் விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தாடை பகுதியில் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. தற்கொலை குறித்து விமானப்படை அதிகாரிகள் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கோவை பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேலோ இந்தியா போட்டி: ஊசூ தற்காப்பு கலையில் ஒசூா் மாணவிகள் சிறப்பிடம்

இந்தியா மீது 50% வரி உயா்வு: நிக்கி ஹேலி எதிா்ப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு

குகை மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் குண்டம் திருவிழா

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

SCROLL FOR NEXT