எடப்பாடி பழனிசாமி 
தமிழ்நாடு

நடந்து முடிந்ததைப் பற்றி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி

பேரவை தேர்தல் வேறு, மக்களவைத் தேர்தல் வேறு என்கிறார் எடப்பாடி பழனிசாமி

DIN

சென்னை: நடந்து முடிந்ததைப் பற்றி பேசக் கூடாது, பேரவைத் தேர்தல் என்பது வேற, மக்களவைத் தேர்தல் என்பது வேறு என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், முதல் முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.

அப்போது அவர் பேசுகையில், சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் மக்கள் எங்களுக்கு சாதகமாக வாக்களிப்பார்கள். திமுக - அதிமுக இரண்டு கட்சிகளுமே மாறி மாறி வெற்றி தோல்வியைக் கண்டு வருகின்றன. ஆட்சி அதிகார பலம், பண பணத்தை வைத்து பல கட்சிகள் பிரசாரம் செய்தன. அதிமுக சார்பில் நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்தார்.

பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என்று, நடந்து முடிந்ததைப் பற்றி பேசக் கூடாது. தேர்தலுக்கு முன்பு அண்ணாமலை பல கனவுகளை கண்டிருப்பார். அண்ணாமலையின் கனவு பலிக்கவில்லை என்பதால் இப்படி பேசுகிறார். எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என்றும் பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக, பாஜக வேட்பாளா்களில் பலா் கவனத்தை ஈா்த்தாலும், இரண்டு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளால், ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. விருதுநகா், தருமபுரி தொகுதிகளில் வெற்றிக் கோட்டை எட்ட முயன்றபோதும், அதை காங்கிரஸ், திமுக கட்சிகள் தட்டிப் பறித்து குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

வார பலன்கள் - கன்னி

வார பலன்கள் - சிம்மம்

கீழவைப்பாறு விண்ணேற்ற மாதா கோயில் 468-வது ஆண்டுத் திருவிழா!

SCROLL FOR NEXT