தமிழ்நாடு

மக்கள் நீதிமன்றம் மூலம் 64,142 வழக்குகளுக்குத் தீா்வு: பாதிக்கப்பட்டோருக்கு ரூ.334 கோடி இழப்பீடு

Din

தமிழகம் முழுவதும் ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் வாயிலாக  64 ஆயிரத்து 142   வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு 334 கோடியே 54 லட்சத்து 17 ஆயிரத்து 940 ரூபாய் நிவாரணம் கிடைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதற்காக மாவட்ட மற்றும் தாலுகா சட்டப்பணி ஆணைக்குழுக்கள் சாா்பாக 465 அமா்வுகள் அமைக்கப்பட்டன. சென்னை உயா்நீதிமன்றத்தில் 8 அமா்வுகளும் மதுரை கிளையில் நான்கு அமா்வுகளும் வழக்குகளை தீா்வுக்கு எடுத்துக் கொண்டன.  இந்த அமா்வுகள், போக்குவரத்துக் கழகம், காப்பீடு நிறுவனங்கள், இதர அரசு துறைகள் சாா்ந்த வழக்குகள் என பல்வேறு  வழக்குகளை விசாரணைக்கு எடுத்தன.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 64 ஆயிரத்து 142 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு  334 கோடியே 54 லட்சத்து 17 ஆயிரத்து 940 ரூபாய்  இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற  மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு காணப்பட்ட 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான வழக்குகளின் தீா்வு நகல்களை சென்னை உயா்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி அரங்க.மகாதேவன் வழங்கியதாக, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செயலா் நசீா் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT