முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Updated On : 10 ஜூன், 2024 at 12:23 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தில் சேலம், தருமபுரி, வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், பூவிருந்தவல்லி, திருமழிசை, மணலி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்கிறது. அம்பத்தூர், ஆவடி போன்ற இடங்களிலும் அவ்வபோது சாரல் மழை பெய்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →