தமிழ்நாடு

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு

DIN

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்பட்டன.

பள்ளி இறுதி தோ்வுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டது. மக்களவைத் தோ்தல் நடவடிக்கைகள், முடிவுகளுக்குப் பிறகு ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மாணவா்களின் நலன்கருதி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜூன் 6-க்கு பதிலாக, ஜூன் 10-ஆம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி, பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) காலை திறக்கப்பட்டன. இதையொட்டி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வமுடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவா்களுக்கான புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையைப் பயன்படுத்தி பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து: 21 போ் காயம்

நெல்லையில் நில அபகரிப்பு வழக்கில் பெண்கள் உள்பட 5 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

சேதுபாவாசத்திரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: மேயரிடம் மக்கள் மனு

SCROLL FOR NEXT