முகப்பு
தமிழ்நாடு

திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை!

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 14 ஜூன், 2024 at 6:53 PM
பகிர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்ததால் பள்ளியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இன்று (ஜூன்14) ஜெயராமன் என்பவரது வீட்டருகே சுற்றித்திரிந்த சிறுத்தையைக் கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் வலைகள் மூலம் சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

தனியார் மாணவிகள் பள்ளிக்குள் இருந்து வெளியேறிய சிறுத்தை குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் பொதுமக்களும் அச்சத்துடன் உள்ளனர். மாணவிகள் அனைவரும் பத்திரமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பள்ளியில் இருந்து வெளியேறிய சிறுத்தை தாக்கியதில் திருப்பத்தூரைச் சேர்ந்த கோபால் (51) என்பவரின் தலையில் பலத்த காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பல்ட் ஜான், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மகேந்திரன் ஆகியோரின் உத்தரவின் பேரில் சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஒலிப்பெருக்கிகள் மூலம் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வேலூரில் இருந்து வனத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்த கோபால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.