Center-Center-Chennai
தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்தது

DIN

சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக வெல்லும் என்றும், தேர்தலைக் கண்டு அஞ்சும் கட்சி அல்ல அதிமுக என்பதை அனைவருமே நன்கு அறிவர். மக்களவைத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களை செய்து திமுக வெற்றிபெற்றுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி சார்பில், திமுக விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவதாக தமிழக முதல்வரும், திமுகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தோ்தலுக்கான நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக மருத்துவா் அபிநயா பொன்னிவளவன் நிறுத்தப்படுவதாக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்திருந்த நிலையில், பாமக வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT