தமிழ்நாடு

கள்ளச்சாராயம் விவகாரம்: பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

DIN

சென்னை: சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடியதும் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

கள்ளச்சாராயம் மரணம் குறித்தையில் பேரவையில் விவாதிக்க வேண்டும் என வியாழக்கிழமை கவன ஈர்ப்பு தீர்மானம் பேரவைத் தலைவரிடம் கொடுத்திருந்தினர்.

இந்த நிலையில், சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூடியது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்

அதிமுக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்திருந்தனர்.

தொடர்ந்து கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பேரவையில் விவாதிக்கக் கோரி அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். அமளியில் ஈடுபட்டோர் பேரவையில் பேசியது எதுவும் பேரவைக் குறிப்பில் இடம்பெறாது. விதிகளை மீறி நடந்து கொண்டால் ஒருநாள் மட்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரித்தார்.

மேலும் பேரவை மாண்பை குலைக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம். அவை நடைபெறுவதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள் என பேரவைத் தலைவர் அப்பாவு தொடர்ந்து வலியுறுத்தினார்.

ஆனால் பேரவைத் தலைவரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

இதையடுத்து பேரவை காவலர்களால் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை குண்டுகட்டாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT