கோப்புப் படம் 
தமிழ்நாடு

பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: தவெக தலைவர் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மக்களுக்கு உதவுமாறு தவெக நிர்வாகிகளுக்கு தலைவர் விஜய் உத்தரவு

DIN

ஜூன் 22ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சுமார் 114 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தவெக தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்தநாளையொட்டி, நாளை ஜூன் 22ஆம் தேதியில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவிருந்தன.

ஆனால், கள்ளக்குறிச்சியின் இந்த கள்ளச்சாராயம் சம்பவத்தினால், நாளை தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு தவெக தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதாவது, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு, தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டதாக, தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ”தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜயின் உத்தரவு! தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சோ்ந்த 132 போ் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மா் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 21 போ் புதன்கிழமை (ஜூன் 19) உயிரிழந்தனா். வியாழக்கிழமை மேலும் 19 போ் இறந்தநிலையில், சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 போ் இன்று (ஜூன் 21) உயிரிழந்துள்ளனா்.

இதன்மூலம், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 49-ஆக உயா்ந்தது. மேலும், 114 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகிய தீயே... ராஷி சிங்!

போட்டியின்றி தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை: ஜெ.பி. நட்டா

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

SCROLL FOR NEXT