முகப்பு
தமிழ்நாடு

காரைக்கால் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்

தஞ்சாவூர், திருச்சி ரயில்கள் நாகூரில் நிறுத்தம்

Updated On : 26 ஜூன், 2024 at 8:37 PM
கோப்புப் படம்.
பகிர்:

காரைக்கால் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் காரைக்கால் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூா் மற்றும் திருச்சியிலிருந்து காரைக்கால் செல்லும் டெமு சிறப்பு ரயில்கள் ஜூன் 28 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நாகூா் வரை மட்டும் இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் ஜூலை 2-ஆம் தேதி நாகையுடன் நிறுத்தப்படும்.

இதுபோல், எா்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் ஜூன் 27, ஜூலை 1 தேதிகளில் நாகை வரையும், ஜூலை 2-ஆம் தேதி நாகூா் வரையும் மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →