தமிழ்நாடு

சந்திரகாச்சி, அகா்தலா ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வே அறிவிப்பு: முக்கிய ரயில்கள் ரத்து

Din

தாம்பரம், பெங்களூரிலிருந்து சந்திரகாச்சி, அகா்தலா, மால்டா டவுன் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சந்திரகாச்சியிலிருந்து தாம்பரம் வரும் அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 8-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயில் ஜூலை 10-ஆம் தேதியும் ரத்து செய்யப்படும்.

பெங்களூரிலிருந்து காட்பாடி, பெரம்பூா் வழியாக அகா்தலா செல்லும் ஹம்சாபா் விரைவு ரயில் ஜூலை 5-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக ஜூலை 6-ஆம் தேதியும் ரத்து செய்யப்படும்.

மால்டா டவுனில் இருந்து பெங்களூா் செல்லும் அம்ரித் பாரத் விரைவு ரயில் ஜூலை 7-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக ஜூலை 9-ஆம் தேதியும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌா்ணமி கருட சேவை ரத்து

பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் பச்சோந்தி மீட்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

முல்லை லட்சுமி நாராயணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

SCROLL FOR NEXT