ஜோலார்பேட்டை அருகே தடம் புரண்ட சரக்கு ரயில்! ரயில் பயணிகள் அவதி!
ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு ரயில் ஜோலார்பேட்டை அருகே தடம் புரண்டது.
ஈரோட்டிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், திருப்பத்தூர் கட்டேரி பகுதியில் சரக்கு ரயிலின் 17 வது பெட்டியின் சக்கரங்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டது.
பின்னர், ரயில்வே துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் ரயில்வே துறை ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து, தடம் புரண்ட சக்கரங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சரக்கு ரயில் தடம் புரண்டதன் காரணமாக ஈரோடு வழித்திடத்தில் செல்லும் தன்பாத், ஹலபி, உள்ளிட்ட ரயில்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.