முகப்பு
தமிழ்நாடு

அதிமுக மகளிர் அணி துணைச் செயலர் காயத்ரி ரகுராம்

Updated On : 2 மார்ச், 2024 at 3:54 PM
பகிர்:

அதிமுக மகளிர் அணி துணைச் செயலராக நடிகை காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பாஜகவில் இருந்து 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

விலகுவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த காயத்ரி ரகுராம், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அண்மையில் அக்கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில் நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராமை அதிமுக மகளிர் அணி துணைச் செயலராக நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.