மின்சார ரயில்கள் ரத்து 
தமிழ்நாடு

இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து: பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மக்கள் கூட்டம்!

சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

DIN

சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே இன்று(மார்ச். 3) தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அந்த நேரத்தில் இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் சீரமைப்புப் பணி கடந்த 3 மூன்று வாரமாக மேற்கொள்ளப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகின்றன.

பிராட்வேயிலிருந்து அண்ணா சாலை வழியாக தாம்பரம் வரை 60 பேருந்துகளும், பிராட்வேயிலிருந்து எழும்பூா், தியாகராய நகா் வழியாக தாம்பரம் வரை 20 பேருந்துகளும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பேருந்துகளும், கொருக்குப்பேட்டையிலிருந்து தாம்பரம் வரை 30 பேருந்துகளும், பிராட்வேயிலிருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பேருந்துகளும், தியாகராய நகரிலிருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகிறது.

மேலும், பயணிகள் வசதிக்காக 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மின்சார ரயில்கள் ரத்து எதிரொலியாக மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்றைய மின்தடை

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

SCROLL FOR NEXT