தமிழ்நாடு

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியால் சிலருக்கு அச்சம்: மோடி

எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது.

DIN

தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகி கட்சி வளர்ச்சியடைந்து வருவதால், சிலருக்கு அச்சம் ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

ஒவ்வொருமுறை சென்னை வரும்போது உற்சாகம் பிறக்கிறது. பாரம்பரியம் மற்றும் வணிகத்துக்கு மையப்புள்ளியாக சென்னை விளங்குகிறது.

சென்னை நகரம் திறன் நிறைந்த இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னைக்கு முக்கியப் பங்கு உள்ளது.

எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தின் தமிழகத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நான் தமிழகத்துக்கு வருவதால் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது.

தமிழ்நாடு, சென்னையின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது. சென்னை மக்களின் தேவைகளை திமுக பூர்த்திசெய்யவில்லை. திமுகவுக்கு மக்கள் துயரங்களைப் பற்றி கவலையில்லை எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் பேரவைத் தலைவர் பதவிக்கு ஜேடியு - பாஜக இடையே நீயா - நானா போட்டி!

புதுவையில் தொடர் மழை! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! | Rain | Shorts

திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாக மனைவியை கொன்ற கணவா்

தோல்விக்கு 100% பொறுப்பேற்கிறேன்! பிரசாந்த் கிஷோர்

தில்லியில் 2 சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT