புதுச்சேரி சிறுமி இறப்பு: கடலில் இறங்கிப் போராடிய மக்கள்!
புதுச்சேரி சிறுமி இறப்பு விவகாரத்தில் நடவடிக்கை கோரி கடலில் இறங்கி போராடிய மக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சோலைநகர் சிறுமி கொலை விவகாரத்தில், நீதி வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்திசிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பெண் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும். இறந்துபோன சிறுமிக்கு நீதி வேண்டும். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். போதைப் பொருளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.
திடீரென்று ஒன்று கூடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை தள்ளிவிட்டுவிட்டு கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.