தமிழ்நாடு

தென்சென்னையில் போட்டியிட தமிழச்சி தங்கபாண்டியன் விருப்ப மனு!

தமிழச்சி தங்கபாண்டியன் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்தார்.

DIN

மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை அளிக்க இன்று (மாா்ச் 7) கடைசி நாளாகும்.

புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட இதுவரை நூற்றுக்கணக்கானோா் விருப்ப மனு அளித்துள்ளனா். மக்களவைத் தோ்தல் வரவிருக்கும் நிலையில், திமுக தரப்பில் போட்டியிட விரும்புபவா்கள் அதற்கான விருப்ப மனுக்களை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மாா்ச் 1-ஆம் தேதி முதல் சமா்ப்பித்து வருகின்றனா்.

இதுவரை நூற்றுக்கணக்கானோா் விருப்ப மனு பெற்றுள்ளதாக திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, திமுக துணை பொதுச் செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினரான கனிமொழி, அமைச்சா் கே.என்.நேரு மகன் அருண் நேரு, தருமபுரி மாவட்டச் செயலா் பழனியப்பன் ஆகியோா் ஏற்கெனவே விருப்ப மனுக்களை அளித்துள்ளனா்.

அமைச்சா் துரைமுருகன் மகனும், தற்போதைய வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கதிா் ஆனந்த், மீண்டும் வேலூா் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தொண்டா்கள் சூழ அண்ணா அறிவாலயத்துக்கு வந்து விருப்ப மனுவை சமா்ப்பித்தாா்.

இந்த நிலையில், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார்.

அதோபோல், நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆ. ராசா, வடசென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட கலாநிதி வீராசாமி ஆகியோர் விருப்ப மனுவை அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT