தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு குழு: ஓபிஎஸ் அறிவிப்பு

DIN

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிவடைந்ததும் ஏப்ரல் மாதத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதை அடுத்து, கூட்டணி குறித்து பேர்ச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அறிவித்துள்ளார் ஓபிஎஸ்.

அந்த குழுவில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஆர்.தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT