தமிழ்நாடு

தேமுதிகவில் ஐ.டி. விங் உருவாக்கம்

DIN

தேமுதிகவில் ஐ.டி. விங் நிர்வாகிகளை நியமித்து கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகையே ஒரு நொடிக்குள் உள்ளங்கையில் பார்க்க வைக்கும் மாபெரும் சாதனையை பேஸ்ஃபுக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம், ட்விட்டர், யூடூப் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்கள் செய்து வருகின்றன. சமுதாயத்தின் பல்வேறு நற்செயல்களுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. தேமுதிகவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரை ஒருங்கிணைக்கும் வகையில் தேமுதிக சமூக வலைதள அணி (DMDK IT Wing) உருவாக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட நிர்வாகிகள் இன்று (10.03.2024) முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

நிர்வாகிகள் விவரம்:

1. S.செந்தில்குமார் Ex MLA - கட்சி சமூக வலைதள அணி செயலர்

2. R.அரவிந்தன் - கட்சி சமூக வலைதள அணி துணைச் செயலர்

3. K.V.மகேந்திரன்- கட்சி சமூக வலைதள அணி துணைச் செயலர்

4. A.தமிழரசன் - கட்சி சமூக வலைதள அணி துணைச் செயலர்

5. சிவக்குமார் நாகப்பன்,B.A.BL- கட்சி சமூக வலைதள அணி துணைச் செயலர்

இவர்களுக்கு கட்சித் தலைமை நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சியடைய பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

இருமல் மருந்து விவகாரம்: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT