தமிழ்நாடு

பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் கொடுத்துள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்

DIN

பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் கொடுத்துள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ.560 கோடி மதிப்பில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண் துறை, பழங்குடியினா் நலத் துறை, கூட்டுறவுத் துறை, சமூக நலத் துறை, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சா்ந்த 8,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். இதையடுத்து, 993 முடிவடைந்த திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, 75 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களுக்கான முத்தான விழா இது. தமிழ்நாடு மகளிர் முன்னேற்றத்தில் தருமபுரிக்கு முக்கியத்துவம் உண்டு. மகளிர் சுயஉதவிக்குழு என்ற அமைப்பை தருமபுரியில்தான் தொடங்கி வைத்தார். பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டத்தை இயற்றியவர் கலைஞர். பொருளாதார அதிகாரம் உள்ளவர்களாக பெண்களை மாற்றி இருக்கிறோம். மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவோம் என்று சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்.

உரிமைத் தொகையை பெற்ற பெண்கள், இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர் என கூறுகின்றனர். மகளிர் உரிமைத் திட்டம் மூலம் 1.15 கோடி பெண்கள் பயன்பெறுகின்றனர். திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட வேண்டுமென்றால் நாள்முழுதும் பேச வேண்டும். 2 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பயன்பெறுகின்றனர். விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.888 சேமிக்கின்றனர்.

24.86 லட்சம் மாணவர்கள் இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர். முதல்வரின் காலை உணவுத் திட்டம் மூலம் 16 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயன் அடையும் வகையில் பார்த்துபார்த்து திட்டம் தீட்டி வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT