அதிமுகவுடன் மன்சூர் அலிகான் கூட்டணிப் பேச்சு 
தமிழ்நாடு

அதிமுகவுடன் மன்சூர் அலிகான் கூட்டணிப் பேச்சு!

மன்சூர் அலிகானுக்கு ஆரணி அல்லது வேலூர் தொகுதி ஒதுக்கப்படுமா?

DIN

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தொடங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தமாக, அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் பாஜகவுடன் கூட்டணியில் போட்டியிட இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இந்த நிலையில், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆரணி அல்லது வேலூர் தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT