கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடையா? - அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

DIN

கர்நாடக மாநிலத்தில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு சில நாள்களுக்கு முன்னதாக தடை விதிக்கப்பட்டது.

பஞ்சு மிட்டாய்களில் தீங்கு விளைவிக்கும் "ரோடமைன் பி" மற்றும் கோபி மஞ்சூரியனில் "டாட்ராசின்" ஆகிய ரசாயனம் கலக்கப்பட்டது கண்டறிந்து பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு கர்நாடகத்தில் தடை விதிக்கப்பட்டது.

இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள், 'தமிழகத்திலும் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்படுமா?' என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கர்நாடகத்தில் கோபி மஞ்சூரியனை தடை செய்ததால், தமிழகத்தில் தடை செய்ய முடியாது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை ஆய்வு செய்து தடை விதிப்போம். குட்கா உள்ளிட்ட பொருள்களுக்கு கர்நாடகத்தில் தடையில்லை, ஆனால் தமிழகத்தில் தடையுள்ளது” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT